தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,000/- குறைந்துள்ளது. இது நகை பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நகை பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே 20ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,690க்கும், சவரன் ரூ.55,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
சென்னை SETS வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
தங்கம் கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கும் விற்கப்பட்டது. அதேபோல் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,650க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தொடர்ச்சியாக 4 நாட்களில் தங்கத்தின் விலையில் ரூ.2000/- குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.