பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை – கனமழை எதிரொலி!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாட்களில், அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
NTPC நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2024 – 50 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கனமழை ஆனது இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

























