சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவரா நீங்கள்..? அப்போ மார்ச் 31ம் தேதிக்குள் இதை செஞ்சு முடியுங்க..
இனி நெடுஞ்சாலை விதிகளை மீறினால் இரு மடங்கு அபராதம்.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை..
அதாவது, “விவசாயிகளின் ஆதார் எண், கைபேசி எண், நில உடைமை விவரங்களை இணைக்கும் முகாம்கள் அனைத்து கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நில உடைமை தொடர்புடைய அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைத்த பின்னர் ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். மேலும், 2025-2026 நிதியாண்டில் வழங்கப்படும் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற இந்த தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் தங்கள் கிராமங்களில் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமும் இன்றி 31-03-2025 தேதிக்குள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது”.


























