
கோடை காலத்தை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இலவச பயணம்.. போக்குவரத்துத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகம் முழுவதும் சாமானிய மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்த அரசு மலிவு விலையில் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் அன்றாட பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கோடைகால வெயில் தாக்கம் காரணமாக அரசு போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதாவது, “ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை அரசு பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்” என்று அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி “முதல் பரிசாக 25 பேர் ஓராண்டுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் 20 முறை முன்பதிவு செய்து இலவசமாக பயணிக்கலாம் என்றும், இரண்டாம் பரிசாக 25 பேர் 10 முறையும் மற்றும் மூன்றாம் பரிசாக 25 பேர் 5 முறையும் இலவசமாக பயணிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.























