ஆயுத பூஜை எதிரொலி: தமிழகத்தில் 1,715 சிறப்பு பேருந்துகள் இயக்கம்., போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை மற்றும் கல்வி ரீதியாக தங்கி இருபவர்கள் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் வருகிற அக்டோபர் 11ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், அக்டோபர் 11 முதல் 13 வரை தொடர் விடுமுறை வழங்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க திட்டம்..!! டிசம்பர் முதல் சோதனை ஓட்டம் ஆரம்பம்..!!
இதனை கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 9,10 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 1,715 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்துகள் கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் கோயம்பேடு ஆகிய 3 பகுதிகளிலும் இருந்து இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தொலை தூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க http://www.tnstc.in மற்றும் Mobile App மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். இதற்கிடையில் சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி, மற்றும் நாகர்கோவில் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது.
























