தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் போர்.. மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்!!
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க திட்டம்..!! டிசம்பர் முதல் சோதனை ஓட்டம் ஆரம்பம்..!!
தற்போது, ஏமனில் ஹவுதி அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனால், இந்த விவகாரம் மூன்றாவது உலகப் போராக வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























