TNRD தமிழக ஊரக துறை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.62000/- || தேர்வு கிடையாது!
தருமபுரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தருமபுரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை |
பணியின் பெயர் | இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
- இரவு காவலர் – 1 பணியிடம்
- ஈப்பு ஓட்டுநர் – 4 பணியிடங்கள்
- அலுவலக உதவியாளர் – 4 பணியிடங்கள்
என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- இரவு காவலர் – எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNPSC Accounts Officer வேலைவாய்ப்பு 2023 – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,09,200/-
சம்பள விவரம்:
- இரவு காவலர் – ரூ.15700 – 50000/-
- ஈப்பு ஓட்டுநர் – ரூ.19500 – 62000/-
- அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/-
விண்ணப்பிக்கும் முறை:
https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.