TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – நேர்முகத் தேர்வு தேதி வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக கால்நடை பராமரிப்பு சேவை பிரிவில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்முகத்தேர்வு மற்றும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் மற்றும் தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
TNPSC Oral Test / CV விவரங்கள் 2023:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை பிரிவில் கால்நடை உதவி மருத்துவர் (Veterinary Assistant Surgeon) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 731 காலியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 15.03.2023 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவானது 25.07.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நேர்முகத்தேர்வு (Oral Test) மற்றும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு (OCV) எழுத்து தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் ஆனது 14.11.2023 அன்று https://www.tnpsc.gov.in/ என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC AE தேர்வுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – ஈஸியா ஆகலாம்.. முழு விவரம் இதோ!
இத்தகைய நேர்முகத் தேர்வுக்கு 1:2 என்ற விகிதத்தின் அடிப்படையில் 1365 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வானது 22.11.2023 அன்று முதல் 06.12.2023 அன்று வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), TNPSC சாலை, சென்னை – 600 003 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. தேர்வர்கள் நேர்காணலுக்கு வரும் போது தங்களது சான்றிதழ்களுடன், ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலையும் உடன் கொண்டு வர வேண்டும். மேலும் தேர்வர்களுக்கு நேர்காணல் நடைபெறும் நேரம் மற்றும் தேதி தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.