TNPSC தேர்வர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…!! தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் அதிரடி மாற்றம்…!!
தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது (TNPSC), ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1, 1ஏ தேர்விற்கான அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. அதன்படி, குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 70 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும், வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி இதற்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்..தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு…!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இதையடுத்து, இந்த TNPSC குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுள்ளது. இந்நிலையில், தற்போது TNPSC ஆனது ஒருமுறை பதிவுக்கான கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இனி UPI மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தலாம் என தேர்வர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


























