TNPSC தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? – அப்போ இத பாருங்க!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதில் குரூப் 1 போட்டி தேர்வானது Prelims , Mains மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்வது முக்கியமானதாகும். மேலும் அதிக மதிப்பெண்களை பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது முக்கியம். எனவே தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
(A) நிலநடுக்கம்
(B) எரிமலை
(C) வறட்ச்சி
(D) வெள்ளம்
(E) விடை தெரியவில்லை
விடை : (C)
2. இந்திய அரசின் பின்வரும் திட்டங்களுள் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வது எது?
(A) ஸ்மைல்
(B) நமஸ்தே
(C) அம்பர்
(D) வெஸ்ட்
(E) விடை தெரியவில்லை
விடை : (B)
3. எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?
(A) சேரர் காலம்
(B) சோழர் காலம்
(C) பாண்டியர் காலம்
(D) சுங்க காலம்
(E) விடை தெரியவில்லை
விடை : (B)
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினா!
4. பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின் படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?
(A) IIT, சென்னை
(B) IISC, பெங்களூர்
(C) AIIMS, டெல்லி
(D) IIT, மும்பை
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
5. காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?
(A) மதுரை
(B) வேதாரண்யம்
(C) சேலம்
(D) திருச்செங்கோடு
(E) விடை தெரியவில்லை
விடை : (D)


























