TNPSC குரூப் 4 – வேதியியல் & இயற்பியல் பாடத்தில் எப்படி கேள்விகள் வரும்?
TNPSC தேர்வுகளில் அறிவியல் பாடத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் என பல கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இத்தேர்வு பாடத்திட்டத்திலேயே மிகப்பெரிய பாடப்பிரிவுகளை கொண்டது ஏர்ல அது அறிவியல் தான். அதிலும் இயற்பியல், வேதியியல் ஆகிய இரண்டும் தனித்தனியாக பெரும்பகுதி பாடங்களை உட்கொண்டிருக்கும். அவற்றை முழுமையாக படித்து முடிப்பது சிரமமான ஒரு செயல். அதனால், இவ்விரு பாடங்களிலும் கேட்கப்படக்கூடிய முக்கிய கேள்விகளை இங்கே இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
1) பீட்டாட்ரான் இத்துகளை முடுக்கும் ஒரு கருவி
(A) எல்க்ட்ரான்
(B) நியூட்ரான்
(C) புரோட்டான்
(D) மேஸான்
விடை – A
2) மருந்தாகப் பயன்படும் எஸ்டர் I
(A) எத்தில் அசிடேட்
(B) மெத்தில் சாலிசிலேட்
(C) எத்தில் பென்சோயேட்
(D) மெத்தில் பென்சோயேட்
விடை – B
3) செயற்கை ரப்பர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மோனோமர் எது?
(A) 1.3-பியூட்டாடையின்
(B) அக்ரிலோநைட்ரைல்,
(C) – வினைல் குளோரைடு
(D) புரப்பியின்
விடை – A
4) வளம் மற்றும் வீரியமான மண்ணின் pH
(A) 2-3
(B) 6-7
(C) 8-10
(D) 11-12
விடை – B
5) இயற்கையிலேயே மிகக் கடினமாக கிடைக்கும் பொருள் எது?
(A) இரும்பு
(B) கிராபைட்
(C) வைரம்
(D) அஸ்டாடைன்
விடை – C