TNPSC குரூப் 4 ” CUT OFF மார்க்” தெரியுமா..?? ” இந்த மதிப்பெண் வாங்குபவர்களுக்கு பணி நிச்சயம்”..!!

0
TNPSC குரூப் 4 ” CUT OFF மார்க்” தெரியுமா..?? ” இந்த மதிப்பெண் வாங்குபவர்களுக்கு பணி நிச்சயம்”..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், கிராம அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244+480 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதியன்று நடத்தப்பட்டது. மேலும், குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒவ்வொரு பிரிவினருக்கும் குரூப் 4 CUT OFF மதிப்பெண்கள் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி இதில் விரிவாக பார்க்கலாம்.

TNPSC Online Classes

TNPSC தேர்வு எழுத வேண்டும் என்றால் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் இல்லாமல் பணி நியமன ஆணை வழங்கப்படும். இதில், OBJECTIVE TEST கேள்விகள் -200, தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு வினாக்கள்-100, பொது அறிவு வினாக்கள்-75, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு வினாக்கள்-25 என மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதில், குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். இதில் கேட்கப்படும் கேள்விகள் 6-10ம் வகுப்பு பாடங்களில் இருந்து மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

RRB NTPC 2024 syllabus|| “பாடங்கள், தலைப்புகள் மற்றும் தேர்வு முறைகளுக்கான முழு தகவலுடன் உள்ளே”..!!

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் CUT OFF மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, பொது பிரிவினருக்கு CUT OFF மதிப்பெண்-172, BC பிரிவினருக்கு-170, BCM-164, MBC-170, SC-167, SC(A)-165 மற்றும் SC-163 வரை CUT OFF மதிப்பெண் நிர்ணயிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட மதிப்பெண்களை விட அதிகமாக எடுக்கும் தேர்வாளர்களுக்கு எளிதில் பணி நியமன ஆணை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!