TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் விரைவில் – அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடந்து பல மாதங்கள் ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டி என் பி எஸ் சி தேர்வு முடிவுகள்:
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் 2022 ஆம் ஆண்டு குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான காலியிடங்கள் முறையே 121 மற்றும் 5097 களுக்கான பணியாளர்களை நிரப்பும் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. முதல் கட்ட தேர்வு 2022 மே 21ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வு எழுதிய 52,150 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு 2023 பிப்ரவரி 25ஆம் தேதி அன்று முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது .
அரசுத் தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? மிக குறைந்த விலையில் பயிற்சி வகுப்பு!! உடனே சேரவும்!!
தேர்வுகள் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது குறித்த அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும், இதன் மூலமாக 6000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் தற்போது உறுதி அளித்துள்ளார்.