
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Section 3 Part A – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 2 – சொல்லகராதி
TNPSC Group 4 2025 VAO Questions
பகுதி அ ; பிரிவு A – பேச்சு வழக்கு தொடர்களில் உள்ள பிழைத் திருத்தம்.
நாம் அன்றாடம் அனைவரிடமும் பேசும் விதத்தினை பேச்சுவழக்கு என்கிறோம். இது நேரடியாக, தமிழில் எழுதும் வழக்கத்தில் இருந்து சற்றே மாறுபட்டு இருக்கும். அந்தவகையில், பேச்சு வழக்கில் உள்ள பிழைகளை திருத்தி எழுத்து வழக்காக மாற்றுவதே பேச்சு வழக்கு தொடர்களில் உள்ள பிழையை திருத்தல் என்கிறோம். இதற்கான சில முக்கிய வினாக்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
1.“அம்மா பசிக்கிது எனக்கு சோறு வேணும்” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- அம்மா பசிக்குது எனக்கு சோறு வேணும்
- அம்மா பசிக்கிது எனக்கு சாப்பாடு வேண்டும்
- அம்மா பசிக்கிறது ! எனக்கு சாப்பாடு வேண்டும்
- அம்மா பசிக்கிறது ! எனக்குச் சோறு வேண்டும்.
2. “ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- நைட்டுக்கு சித்தப்பாவா காவலுக்கு போக சொல்லு.
- இரவு சித்தப்பாவை காவலுக்கு போக சொல்.
- இரவு சித்தப்பாவா காவலுக்கு போக சொல்லு.
- ரவைக்கு சித்தப்பாவை காவலுக்கு போக சொல்.
3. “சரிங்கண்ணே” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- சரி அண்ணா!
- சரிங்க அண்ணே
- சரிணே
- சரி அண்ணே
4. “வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- வீட்டாண்டை விளையாண்ட குழந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு
- வீட்டு அருகில் விளையாண்ட குழந்தையை அப்பா எங்க கூட்டிகிட்டு சென்றார்.
- வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கே அழைத்துக்கொண்டு சென்றார்.
- வீட்டாண்டை விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கே அழைத்துக்கொண்டு சென்றார்.
TNPSC Group 4 2025 Mock Test In Tamil
5. “நிலத்த கெளறணும்டா அப்பதான் வகுறு நிறையும்” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- நிலத்தை கெளறுணத்தான் வயிறு நிறையும்
- நிலத்த உழுத்த தான் வயிறு நிறையும்.
- நிலத்தை உழுத்த தான் வகுறு நிறையும்
- நிலத்தை உழுதால் தான் வயிறு நிறையும்.
6. “என் பல்லு உழுந்திடுச்சு” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- என் பல் விழுந்திடுச்சு
- என்னுடைய பல் விழுந்து விட்டது
- எனக்கு பல் விழுந்திடுச்சு
- எனக்கு பல் விழுந்து விட்டது.
7. “ஒசரமா வளந்துட்டான்” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- உயரமா வளந்திட்ட
- ஒசரமா வளர்ந்து விட்டான்
- உயரமாக வளர்ந்து விட்டான்
- உயரமாக வளர்ந்திட்டான்.
8. “ஊரிலிருந்து வந்திருக்கியா ?” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- ஊருலிருந்து வந்தாயா ?
- ஊருக்கு வந்தாயா ?
- ஊருக்கு வந்தியா ?
- ஊருலிருந்து வந்தியா ?
9. “தண்ணீர் கொண்டா” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- தண்ணி கொண்டு வா
- தண்ணீர் கொண்டு வா
- தண்ணீ கொண்டா
- நீர் கொண்டு வா
10. “அண்ணைக்கு அவனுக்கு ஒதவியிருக்க வேண்டியதான” என்னும் இச்சொற்றொடரில் உள்ள பிழையை திருத்துக.
- அன்னைக்கு அவனுக்கு உதவியிருக்க வேண்டியதான.
- அன்றே அவனுக்கு உதவி இருக்க வேண்டியது தான
- அப்போதே அவனுக்கு உதவி இருக்க வேண்டியது தான
- அன்று அவனுக்கு உதவி இருக்க வேண்டியது தான்.
மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள PDF – ஐ பார்வையிடவும்.

























