
போக்குவரத்து விதிகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்.. இனி HORN களில் கடுமையான சத்தம் கிடையாது.. மத்திய அரசின் அதிரடி முடிவு..!!
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதில் 1.5 லட்சம் மக்கள் விபத்துகளால் காயமடைகின்றனர். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3 % பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே சாலை அனுபவத்தை மேம்படுத்தவும், ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், ஒரு புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி முன்மொழிந்துள்ளார்.
TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
அதாவது, “வழக்கமான கடுமையான மற்றும் சத்தமிடும் HORN சத்தங்களுக்கு பதிலாக, புதிய விதிமுறையின்படி, இனிமையான இந்திய இசை ஒலிகளை மட்டுமே வாகன HORN ஆக பயன்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதன்படி புல்லாங்குழல், தபேலா, ஹார்மோனியம் போன்ற ஒலிகளை HORN னில் பயன்படுத்தி இந்திய சாலைகளில் ஏற்படும் குழப்பத்தை குறைத்து, நகரங்களில் மிகவும் அமைதியான, கலாச்சார ரீதியாக வளமான ஒலிக்காட்சியைக் கொண்டு வரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

























