பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன..?? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

0
?????????????? ???????? ????? ??????????? ???? ????..?? ?????????????????? ?????? ?????? ??????..!!
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன..?? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன..?? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகம் முழுவதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து, 12 ஆம் வகுப்பிற்கான முடிவுகள் மே 8 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கான முடிவுகள் மே 16 ஆம் தேதியும் வெளியானது. இத்தேர்வுகளில் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு., தமிழ் முந்தைய ஆண்டு வினாக்கள்!!

அதாவது, மார்ச் மாதம் நடைபெற்ற இந்த தேர்வில் இரு வகுப்புகளிலும் சேர்த்து 1 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்து உள்ளனர். “அதில் 73,820 பேர், அதாவது 71.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதால் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 17A நோட்டீஸை கல்வித் துறை அனுப்பியுள்ளது”. மேலும், குறிப்பாக, அரசு மாதிரிப் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், “EMIS உட்பட கற்றல் சாரா பணிகளையும், கலைத் திருவிழாக்களையும் மேற்கொள்ள ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், தேர்ச்சி அடையாத மாணவர்களுக்காக ஆசிரியர்களைப் பொறுப்பாக்கி விளக்கம் கேட்பது நியாயமில்லை என்றும், இந்த செயல்களை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்றும் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!