TNTET Exam Pattern 2024: Understand the Marking System & Exam Time Spen

0
TNTET Exam Pattern 2024: Understand the Marking System & Exam Time Spen
TNTET Exam Pattern 2024: Understand the Marking System & Exam Time Spen

TNTET Exam Pattern 2024: Understand the Marking System & Exam Time Spen

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆனது தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வை (TNTET) வருடந்தோறும் நடத்தி வருகிறது. மேலும், இத்தேர்வின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை நடத்த தகுதியான ஆசிரியர்களை தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணியமர்த்தி வருகிறது. மேலும், இந்த TNTET தேர்வானது தாள் 1 மற்றும் தாள் 2 என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதாவது, தாள் ஒன்றானது 1 முதல் 5ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்க தகுதியான ஆசியர்களை நியமிக்கவும் மற்றும் தாள் இரண்டானது 6 முதல் 8ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்க தகுதியான ஆசியர்களை நியமிக்கவும் நடத்தப்படுகிறது.

அதன்படி , கடந்த ஆண்டுகளின் தரவுகளின் அடிப்படையில் அடுத்து நடைபெற உள்ள TET தேர்வில் தாள் 1 மற்றும் தாள் 2-ல் கேட்கப்படும் பாடத்திட்டங்களின் கண்ணோட்டம் மற்றும் மதிப்பெண் மதிப்பீட்டு முறைகளை கீழே தெளிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதை தெரிந்து கொள்வது , TET தேர்வுக்காக மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மேலும், இந்த மதிப்பெண் மதிப்பீட்டு பட்டியலை அறிந்து கொள்வதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற்று எளிதில் பணியில் சேர அதிக வாய்ப்புள்ளது.

TNTET பாடத்திட்டத்தின் கண்ணோட்டம்:

பாடங்களின் எண்ணிக்கை:
  • தாள் 1: ஐந்து தலைப்புகள்
  • தாள் 2: நான்கு தலைப்புகள்
கால அளவு:
  • தாள் 1: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
  • தாள் 2: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
மொத்த கேள்விகள்:
  • தாள் 1: 150
  • தாள் 2: 150
மொத்த மதிப்பெண்கள்:
  • தாள் 1: 150
  • தாள் 2: 150
குறிக்கும் அமைப்பு:
  • சரியான விடைக்கு 1 மதிப்பெண்
  • தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண் கிடையாது

காகித மொழி: தமிழ் & ஆங்கிலம்

சிரமம் நிலை: வகுப்பு 12 நிலை

பாடங்கள்:

தாள் 1:

  1. ஆங்கிலம்
  2. தமிழ்
  3. கணிதம்
  4. சுற்றுச்சூழல் ஆய்வுகள்
  5. குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்

TET தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…தேர்வு அறிவிப்பு வந்தாச்சா..? “உடனே இதை பாருங்க”..!!

தாள் 2:

  1. ஆங்கிலம்
  2. தமிழ்
  3. கணிதம் & அறிவியல் அல்லது சமூக ஆய்வுகள்
  4. குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்
தாள் 1 மதிப்பெண்களின் மதிப்பீட்டு முறை:
பாடத்திட்டங்கள் வினாக்கள் மதிப்பெண்கள் மொழிகள்
மொழி-I

தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது

 

30

 

30

 

மொழி-II

ஆங்கிலம்

 

30

 

30

 

கணிதம்  

30

 

30

தமிழ்

/ ஆங்கிலம்

சுற்றுச்சூழல் ஆய்வுகள்  

30

 

30

தமிழ்

/ ஆங்கிலம்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்

(6-11 வயதிற்கு உட்பட்டவர்கள்)

 

30

 

30

தமிழ்

/ ஆங்கிலம்

 

மொத்தம்

 

 

 

150

 

 

150

 

 

தாள் 2  மதிப்பெண்களின் மதிப்பீட்டு முறை :
பாடத்திட்டங்கள் வினாக்கள் மதிப்பெண்கள் மொழிகள்
மொழி-I

தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது

 

30

 

30

 

மொழி-II

ஆங்கிலம்

 

30

 

30

 

கணிதம், அறிவியல் மற்றும்

சமூக அரசியல்

 

 

 

60

 

 

60

 

தமிழ்

/

ஆங்கிலம்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்

(கட்டாயம்)

 

30

 

30

தமிழ்

/ ஆங்கிலம்

 

மொத்தம்

 

 

 

150

 

 

150

 

 

 

 

இது போன்ற, பயனுள்ள தகவலை உடனுக்குடன் பெற EXAMSDAILY-தமிழ் இணையதள பக்கத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!