தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்!!

3
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கல்வித்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் கல்வி நிறுவனங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இதனை பின்பற்றி தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய எழுத்தர் பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு!!!

அதற்கடுத்த படியாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை துரிதமாக செய்து வருகிறது. 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி தொடங்கும் என அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளிலும் பெரிதளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்பதால் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழக மின்சார வாரியத்தில் 9613 காலிப்பணியிடங்கள் – பணிநியமனம் வழங்கல்!!

அதுமட்டுமின்றி 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்கிற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. நடப்பு கல்வியாண்டு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளது என்பதால் பள்ளி வகுப்பறைகள், ஆசிரியர்களை பார்க்காமல் மாணவர்களுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு!!

இதனால் குறைந்தது 2 மாதங்களாவது 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் காரணத்தால், பிற மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கும் பொழுது இடநெருக்கடி ஏற்படும்.

TN Job “FB  Group” Join Now

எனவே இது குறித்து சுகாதாரத்துறையின் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அவர்களின் அனுமதி பெறப்பட்ட பிறகே முதல்வரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. வேலை செய்யாமலே சம்பளம் என்பதைப் போல் நடித்து பரீட்சை எழுதாமலே பாஸ்.. சபாஷ்….

  2. Don’t reopen for kids 1to 8 its enough up to 9to12 only two months having to complete please leave us don’t reopen we don’t come to school opened for 9to12 itself OK don’t reopen for 1to8 safety first just two months please government we are requesting you🙏🏻🙏🏻🙏🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!