தமிழக மின்சார வாரியத்தில் 9613 காலிப்பணியிடங்கள் – பணிநியமனம் வழங்கல்!!

1
தமிழக மின்சார வாரியத்தில் 9613 காலிப்பணியிடங்கள் - பணிநியமனம் வழங்கல்!!
தமிழக மின்சார வாரியத்தில் 9613 காலிப்பணியிடங்கள் - பணிநியமனம் வழங்கல்!!
தமிழக மின்சார வாரியத்தில் 9613 காலிப்பணியிடங்கள் – பணிநியமனம் வழங்கல்!!

தமிழக மின்சார வாரியத்தில் களப்பணிகளுக்காக உருவாக்கப்பட்ட 9,613 கேங்மேன் பணிகளுக்கு பணிநியமன ஆணை இரவோடு இரவாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கேங்மேன் பணியிடங்கள்:

2019 ஆம் ஆண்டு தமிழக மின்சார வாரியத்தில் களப்பணிகளுக்கான உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கமணி கூறுகையில், “ஏற்கனவே சொன்னது போல் தமிழக மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது.

TN Job “FB  Group” Join Now

கேங்மேன் பணியிடங்களுக்கு 10,000 பேரை நியமிக்கவுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பணியிடங்களை தடை செய்ய வேண்டும் என மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் உயர்நீதிமன்றம் சென்றுள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெற்றால் 10,000 பேருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு!!

இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கான 70% சதவிகித தேர்வுகள் முடிவடைந்துவிட்டது எனவே இந்த பணியிடங்களுக்கு தடை விதிக்க முடியாது ஆனால் தற்போது ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் வழக்கம் போல பணியாற்றலாம் என அவர்கள் தரப்பு வாதத்தை வைத்தனர்.

யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறுவாய்ப்பு கிடையாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 5000 கேங்மேன் பணியிடங்களுக்கான நியமனம் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தமிழக மின்சார வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 9613 கேங்மேன் பணியிடங்களுக்கான பணிநியமன அரசாணையை நேற்று முன்தினம் மின்சார வாரியம் இரவோடு இரவாக மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுந்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here