தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – சி.இ.ஓ. விளக்கம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று கொண்டுள்ளது. பள்ளிகளே வாக்குச் சாவடி மையங்களாக செயல்படுவதால் மாணவர்களுக்கு அடுத்து நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்து முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளில் உள்ள பள்ளிகளே வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலின் எதிரொலியினால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது.
TN Job “FB
Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் காரணமாக பள்ளிகள் யாவும் தற்போது ஓட்டுச்சாவடிகளாக செயல்பட்டு வருகிறது.
நேரடி வகுப்புகள் !
விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மீண்டும் பள்ளியில் கற்பித்தல் பணிகளை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றோடு வாக்குப்பதிவு முடிந்தாலும் பள்ளிகளை மீண்டும் சுத்தப்படுத்திய பிறகே வகுப்புகள் நடைபெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வாக்குப்பதிவு முடிந்தபிறகு பள்ளி வழக்கம் முழுவதும் சுத்தப்படுத்திய பிறகே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்ட வேண்டும். அவ்வாறு சுத்தப்படுத்தப்படவில்லை என்றாலும் தலைமை ஆசிரியர் அதற்கான பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.