தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் – பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் - பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் - பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் – பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசியை கடத்துவது அல்லது பதுக்குவது உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொதுமக்கள் நேரடியாகவே புகார் அளிக்கலாம் என நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

ரேஷன் அரிசி கடத்தல்:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு இருந்தாலும், பல்வேறு ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் விற்பது, பிற மாநிலங்களுக்கு கடத்துவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர், முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அரிசி கடத்துவது தொடர்பாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கறவை மாடுகளுக்கு காப்பீட்டு திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

அதாவது, தமிழகத்தில் இருந்து தான் லாரி, பைக், கார் போன்ற வாகனங்கள் மூலமாக அதிக அளவில் அரிசி கடத்தி வந்து அதனை பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார். இதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரிசி கடத்துதலை தடுப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், போலீசார் மற்றும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதுபோக ரேஷன் கடை பொருட்களை பதுக்குதல் மற்றும் பிற மாநிலங்களுக்கு கடத்துதல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் 1800 599 5950 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் எனவும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!