தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!! 

0
தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!! 
தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!! 
தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!! 

பணிநிரந்தரம் கேட்டு சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர்களின் சம்பள பணத்தில் இருந்து ஒரு வாரத்துக்கான ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள்:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் அவ்வப்போது பல கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு போராட்டத்தின் விளைவால் பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.7,700 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

கூட்டுப் பட்டங்கள் வழங்குவது குறித்து – யுஜிசி கருத்துக் கேட்பு!!

போராட்டம்:

ஊதிய உயர்வு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. மேலும், வாரத்தில் இரண்டு நாட்களாக இருந்த பணி நாட்களை மூன்று அரை நாட்களாக மாற்றியமைத்தது. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் அப்போதும் திருப்தியடையவில்லை. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு டி.பி.ஐ வளாகத்தில் தர்ணா போராட்டத்தை கடந்த மாதம் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தினார்கள்.

TN Job “FB  Group” Join Now

அரசு நடவடிக்கை:

பகுதி நேர ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் தமிழக அரசு, அவர்களின் சம்பளத்தை பிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், சென்னையில் நடந்த ஒரு வார போராட்டத்திற்கு பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்ய கருவூலத்துறைக்கு பள்ளிக்கு கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. இதன்படி, எட்டு நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்து அந்த நிதியை மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!