TN MRB துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலை…  400+ காலிப்பணியிடங்கள்…விரைந்து விண்ணப்பிக்கவும்

0
TN MRB துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலை...  400+ காலிப்பணியிடங்கள்...விரைந்து விண்ணப்பிக்கவும்
TN MRB துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலை...  400+ காலிப்பணியிடங்கள்...விரைந்து விண்ணப்பிக்கவும்

TN MRB துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலை…  400+ காலிப்பணியிடங்கள்…விரைந்து விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியமானது (TN MRB) மருந்தாளுநர் (Pharmacist) பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 425 மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

TN MRB காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 425 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மருந்தியல் கவுன்சிலில் சான்றிதழை பதிவு செய்து ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.

இந்திய கடலோர காவல் படையில் ரூ. 21,700 மாத ஊதியத்தில் வேலை…10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…முழு விவரங்கள் உள்ளே..

TN MRB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN MRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 35,400 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN MRB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் https://mrb.tn.gov.in/index.php என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 10-03-2025 ஆம் தேதியே இறுதிநாளாகும். எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!