
இந்திய கடலோர காவல் படையில் ரூ. 21,700 மாத ஊதியத்தில் வேலை…10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…முழு விவரங்கள் உள்ளே..
இந்திய கடலோர காவல் படையில் நாவிக் பொதுப்பணி மற்றும் நாவிக் டொமஸ்டிக் பிரான்ச் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த அறிவிப்பின் மூலம் 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
NAVIK காலிப்பணியிடங்கள்:
இந்தியா முழுவதும் மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவிக் பொதுப்பணி – 260
நாவிக் டொமஸ்டிக் பிரான்ச் – 40
NAVIK கல்வித்தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாவிக் பொதுப்பணி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பாட பிரிவுகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நாவிக் டொமஸ்டிக் பிரான்ச்:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NAVIK வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NAVIK ஊதிய விவரம்:
இரண்டு பதவிகளுக்கும் தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 21,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
NAVIK தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
NAVIK விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடலோர காவல் படையின் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 03.03.2025ஆம் தேதியே இறுதிநாளாகும். எனவே, விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

























