தொடர்ந்து புது புது அப்டேட்களை வெளியிடும் இன்ஸ்டா…!! இந்த முறை என்ன அப்டேட் தெரியுமா..?
இன்ஸ்டாகிராம் என்பது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு பொழுதுபோக்கு செயலியாகும். இதன் மூலம் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் லொகேஷன் அனுப்பவும் பெறவும் முடியும். மேலும், இந்நிறுவனம் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக அவ்வப்போது புதிய அப்டேட்களை நடைமுறைப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியான புதிய அம்சம் ஒன்றை பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, “வாட்ஸ்அப்பைப் போலவே இன்ஸ்டாகிராமிலும் தற்போது, பயனர்கள் தங்கள் பிரைவேட் சாட்டில் (Private Chat) உள்ள மெசேஜ்களை பின் செய்வதற்கான அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இன்ஸ்டாவில் உள்ள பாடல்களை டைரக்ட் மெசேஜ் (DM) மூலம் ஷேர் செய்து கொள்ளும் வசதியும் புதிய அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது”.


























