
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit I Section 2 Part C – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 2 – சொல்லகராதி
பிரிவு C – எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஓரெழுத்து ஒருமொழி, உரிய பொருளை கண்டறிதல்.
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு C – I. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
ஒரு சொல்லுக்கு எதிர் பொருள் தரக்கூடிய சொல்லை ‘எதிர்ச்சொல்’ என்கிறோம். மேலும், இவை பொதுவாக இரு எதிர்மறையான பண்புகளை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மாளிகை – குடிசை, உயரம் – குட்டை இவற்றை கூறலாம். எனவே, இதை குறிப்பாக கொண்டு கீழே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
- ‘இணையற்ற’ என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக.
A . நிகரான
B . ஒப்பற்ற
C . மெலிந்த
D. தடித்த
2.‘அரிது’ என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக.
A . மென்மை
B . கடினம்
C . எளிது
D. சுலபம்
3. ‘இகல்’- எதிர்ச்சொல் தருக.
A . அன்பு
B . பகை
C . உறவு
D. நட்பு
4. ‘ஓங்கியது’- எதிர்ச்சொல் தருக.
A . வீங்கியது
B . தாழ்ந்தது
C . விரிந்தது
D. சுருங்கியது
5. ‘வெம்மை’ – எதிர்ச்சொல் தருக.
A . வெப்பம்
B . இம்மை
C . தண்மை
D. இன்மை
பிரிவு A – 2. ஓரெழுத்து ஒருமொழி.
ஒரு தமிழ் எழுத்து தனித்து நின்று பொருள் தருவது ‘ஓரெழுத்து ஒரு மொழி’ என்று அழைக்கப்படுகிறது. மேலும், தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ‘ஆ’, ‘பூ’, ‘தா’ மற்றும் ‘போ’ போன்ற சொற்கள் ஓர் எழுத்தாக நின்று பொருள் தருவதாகும். மேலும், இது தொடர்பான சில பயிற்சி வினாக்களை கீழே பார்ப்போம்.
- ‘ஐ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருள் தருக.
A . உருவு
B . தலைவன்
C . மந்திரம்
D. தகுதி
2. ‘தே’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருள் தருக.
A . கடவுள்
B . தேய்தல்
C . பசு
D. மேல்
3. ‘ஏ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருள் தருக.
A . அம்பு
B . கருவி
C . எழுத்து
D. பொருள்
4.‘பே’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருள் தருக.
A . இரை
B . சிறை
C . நுரை
D. மறை
5. ‘மை’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருள் தருக.
A . சந்தனம்
B . கண் மை
C . கண்
D. அஞ்சனம்
பிரிவு C – 3. தமிழ் சொல்லுக்கு உரிய பொருளை கண்டறிதல்.
ஒரு தமிழ் சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை அறிதல் உரிய பொருளை கண்டறிதல் என்கிறோம். எடுத்துக்காட்டாக, மேதினி – உலகம், வழி – நெறி ஆகியவை உரிய பொருளைத் தருகின்றன. எனவே, இவற்றை குறிப்பாக கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- ‘மது’ என்னும் சொல்லுக்கு உரிய பொருளை தருக.
A . குழந்தை
B . தேன்
C . பெண்
D. சோலை
2. ‘மேதி’ என்ற சொல்லுக்கு உரிய பொருளை தேர்ந்தெடுக்கவும்.
A . எருமை
B . வட்டம்
C . குதிரை
D. சோலை
3.‘நாளிகேரம்’ என்னும் சொல்லுக்கு உரிய பொருளை தருக.
A . நாகமரம்
B . புன்செய் நிலம்
C . தென்னை
D. திண்ணை
4.‘கமுகு’ என்ற சொல்லுக்கு உரிய பொருளை தேர்ந்தெடுக்கவும்.
A . அறிவு
B . பாக்கு
C . பெண் யானை
D. வெற்றிலை
5. ‘தார்’ என்னும் சொல்லுக்கு உரிய பொருளை தருக.
A . பட்டு
B. பவளம்
C. மாலை
D. செல்வம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.

























