
ரொக்கமாக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய போறீங்களா..? அப்போ இந்த விதிமுறைகளை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
மக்கள் பலரும் வங்கியில் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பு மற்றும் அதிக வட்டி கிடைக்ககூடும் என்ற இரு காரணங்களுக்காக தான். மேலும், பெரிய இலக்குகளை அடையவும், நீண்ட காலத்திற்கு பணத்தை வைத்திருக்கவும் பெரும்பாலானோர் சேமிப்புக் கணக்குகளை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் சேமிப்புக் கணக்குகளில் ரொக்க டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல் தொடர்பாக வருமான வரித் துறையின் குறிப்பிட்ட விதிகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
அதாவது, சேமிப்புக் கணக்குகள் மூலம் நடக்கும் பெரும்பாலான பரிவர்த்தனைகள் UPI டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பணம் டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுவதற்கான செயல்முறை எளிதானதாக மாறியுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வருமான வரிச் சட்டம் குறிப்பிட்ட வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி சேமிப்பு கணக்குகளின் , “ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டெபாசிட்கள் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதற்கு நேர்மாறாக, நடப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்திற்கு மேல் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் தங்கள் பணம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்”. மேலும், “வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194N இன் கீழ், ஒரு தனிநபர் கடந்த மூன்று ஆண்டுகளாக வருமான வரி (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.20 லட்சத்திற்கு 2% மற்றும் ரூ.1 கோடிக்கு 5% TDS வரி பிடித்தம் செய்யப்படும்”. கூடுதலாக, பிரிவு 269ST ஒரு பரிவர்த்தனையில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க வைப்புத்தொகைக்கு அபராதம் விதிக்கிறது. எனவே பெரிய பரிவர்த்தனைகளை செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் வங்கி அல்லது நிதி நிபுணரை அணுகிய பின் டெபாசிட் செய்வது நல்லது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.























