
இந்திய அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஏற்பட்ட தீடீர் மாற்றம்..!!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி டெஸ்ட் போட்டி மார்ச் 9ம் தேதி வரை நிகழவிருக்கும் நிலையில் குரூப் A பிரிவில் இடம்பெற்ற நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும், குரூப் B பிரிவில் தற்போது ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் நாளை இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகாத நிலையில் நாளை (02-03-2025) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், ரோஹித்திற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.


























