
அரசு சான்றிதழுடன் போட்டோகிராபி, வீடியோ எடிட்டிங் பயிற்சி வகுப்புகள்…10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..முழு விவரங்களுடன்
தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நாட்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு, 18 வயது பூர்த்தியடைந்த குறைந்தபட்சம் 10 வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதன் பயனாளர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதியும் ஏற்படுத்தி தரப்படுகிறது. மேலும், இதுகுறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள https://www.editn.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும். மேலும், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 8668108141 அல்லது 8668102600 என்ற எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெறுபவர்களுக்கு, அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























