
அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் சோதனை.. கொத்து கொத்தாக சிக்கிய தரமற்ற பொருட்கள்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..
மின் வணிகம் அல்லது மின்னணு வணிகம் எனப்படுவது இணையதளம் வழியாக பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வதாகும். மேலும், இதனை மக்கள் பொதுவாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் கட்டண செயலாக்கதிற்காக உபயோகித்து வருகின்றனர். இதில் அமேசான், ஈபே, பேபால் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மக்களிடையே மிகவும் பரவலாக அறியப்பட்ட மின் வணிகங்கள் ஆகும். இந்நிலையில் அமேசான், பிளிப்கார்ட் சேவைகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.”
அதாவது, ஆன்லைனில் அனைத்து வகை பொருட்களயும் விற்பனை செய்து வரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், அவ்வப்போது காலாவதியான, தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதை பற்றி விசாரிக்க “திருவள்ளூர் மாவட்டம் புதுவயலில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனிலும், கொடுவள்ளி பகுதியிலுள்ள பிளிப்கார்ட் குடோனிலும் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் BIS முத்திரை இல்லாத உலோக குடிநீர் பாட்டில்கள், சீலிங் பேன்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























