
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம்.. எங்கு எப்போது நடைபெறவிருக்கிறது என்று தெரியுமா..?
பரபரப்பான வாழ்க்கை முறைக்கு பெயர் போன சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்க அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். மேலும், சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் மூன்று வழித்தடங்களில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் இத்திட்டம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் ஆனது, ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை நிறைவு செய்துள்ளது. இதற்கான முதல் சோதனை ஓட்டம் இன்று (20-03-2025) மாலை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூந்தமல்லியில் இருந்து முல்லைத் தோட்டம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது”.

























