கைவினைஞர்களுக்கு கடன் உதவி வழங்கும் தமிழக அரசு… அற்புதமான மானியங்களுடன்.. முழு விவரம் உள்ளே..!!
மக்களுக்கான தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது சொந்த தொழில் தொடங்கும் கைவினைஞர்களுக்கு கடன் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, தொழில் நிறுவன துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், சுதந்திரமாக செய்து வரும் 25 கைவினைக் கலைகளில் (மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டிட வேலைகள், கூடை முடைதல், பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள். மீன் வலை தயாரித்தல், தையல் வேலை. நகைசெய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி வெளுத்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள். மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள்) ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்காக “கலைஞர் கைவினைத் திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கும், நவீன வடிவில் விரிவாக்கம் செய்ய அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, “www.msmeonline.tn.gov.in” என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தால் தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்கு பரிந்துரைக்கும் என கூறப்பட்டுள்ளது.


























