அரசு ஊழியர்களுக்கு ஆப்படித்த உச்சநீதிமன்றம்..!! வெளியான உத்தரவால் பீதியில் அரசு அதிகாரிகள் ..!!
பெரும்பாலனோர் அரசாங்கத்தில் வேலை செய்ய விரும்புவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வேலையின் நிலைத்தன்மை. மேலும், அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் உயர்ந்த கௌரவத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல், வேலை பாதுகாப்பு, நிலையான வேலை நேரம், ஊதிய விடுமுறைகள், ஓய்வூதிய பலன்கள் மற்றும் பல்வேறு வரிச் சலுகைகளை அனுபவிப்பதும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் அரசு வேலையில் சேர்வதற்கு இந்திய குடிமகனாக இருக்க வேண்டியது முக்கியமான விதியாகும்.
இதை தொடர்ந்து ஒரு தனிநபர் இந்தியர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் அவரது கல்வி தகுதி போன்றவற்றை காவல்துறை, பள்ளி கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகள் சரி பார்த்திருக்க வேண்டியது அவசியம். இந்த சரிபார்ப்பு முறையாக நடைபெறாததால் பலர் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. இதை தடுக்க எந்த ஒரு தனிநபரும் அரசு பணியில் சேர்ந்த முதல் 6 மாதங்களுக்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டும் என்றும், அந்த நபர் பணியில் சேர்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்களின்படி அவரது குணநலன், பின்னணி, தேசியத் தன்மை, உண்மை தன்மை ஆகியவற்றை நன்றாக சரி பார்த்த பிறகுதான் அவரை பணி நிரந்தரம் செய்ய’ வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




























போலி சான்றிதழ்கள் மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் மேற்கண்ட தலைப்பு அனைத்து அரசு அலுவலர்களையும் அவமதிப்பு செய்யும் வகையில் உள்ளது. பொதுவில் தலைப்பு வைப்பதை நிறுத்தவும்.
மிகவும் நல்ல ஆலோசனை.. இதனை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது வரவேற்கத்தக்கது…
இதில் என்ன பீதி. மண்ணாங்கட்டி.
இதையெல்லாம் சரி பார்த்துதான் எங்களை எல்லாம் வேலையில் சேர்த்ததாக இதுவரை நம்பி வந்தோம்
களவாணிகள் களை எடுக்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை