தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய டைடல் பூங்கா.. எங்கு அமையவிருக்கிறது தெரியுமா..??

0
??????????? ???????? ??? ????? ????? ??????.. ????? ??????????????? ????????..??
தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய டைடல் பூங்கா.. எங்கு அமையவிருக்கிறது தெரியுமா..??

தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய டைடல் பூங்கா.. எங்கு அமையவிருக்கிறது தெரியுமா..??

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை மேம்படுத்த மினி டைடல் பூங்காக்கள் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும், விழுப்புரம், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைட்டில் பார்க்குகள் அமைக்கப்பட்ட நிலையில் மதுரை மற்றும் திருச்சியிலும் பிரமாண்டமாக டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.

தொலைத்தொடர்பு வரலாற்றில் புதிய சாதனை.. மின்னல் வேக 10G  இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா..!!

இது குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் TRB ராஜா, “கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் IT துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க, புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது “தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஆனது திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியுள்ளது. மேலும், ரூ.34 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் உருவாகும் இந்த மினி டைடல் பூங்காவுக்கான கட்டுமான பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!