
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு – 3274 காலிப்பணியிடங்கள் ||விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..
ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை TNSTC ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அதில் 3274 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தகவல்களை தெளிவாக படிக்கவும்.
TNSTC காலிப்பணியிடங்கள் :
ஓட்டுநர், நடத்துனர் பணிக்கென காலியாக உள்ள 3274 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
Metropolitan Transport Corporation ( Chennai ) – 364
State Express Transport Corporation ( SETC ) – 318
TNSTC ( Vilupuram ) – 322
TNSTC ( Kumbakonam) – 756
TNSTC ( Selam) – 486
TNSTC ( Coimbatore ) – 322
TNSTC ( Madurai ) – 362
TNSTC ( Tirunelvali ) – 344
ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான கல்விதகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் , அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு TNSTC – நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, Skill Test (Driving Test) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இன்றே இறுதிநாள் என்பதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.























