பெண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. இனி இவர்களுக்கும் அடையாள அட்டை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

0
??????????? ??? ?????? ??????.. ??? ????????????? ?????? ?????.. ????? ???? ??????? ?????????..!!
பெண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. இனி இவர்களுக்கும் அடையாள அட்டை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

பெண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. இனி இவர்களுக்கும் அடையாள அட்டை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் வறுமையை ஒழிக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் மூலம் சுழல் நிதி கடன், பொருளாதார கடன் மற்றும் வங்கி கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும், அரசால் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிருக்கு முதல் கட்டமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி.. ரூ.10,000 வரை போனஸ் வழங்கவிருக்கும் ஒன்றிய அரசு.. எப்போன்னு தெரியுமா..??

அதன்படி “தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணியை 9 மாதங்களில் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த அடையாள அட்டையில் உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக் குழுவின் பெயர், பிறந்த தேதி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட எண் உள்ளிட்ட விவரங்களுடன் QR CODE இடம் பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!