சென்னையில் இன்று நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம்…தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட முக்கிய தகவல்

0
?????????? ????? ???????????????? ????????? ????? ???????...????????? ????? ??????? ??????? ??????? ??????? ?????
சென்னையில் இன்று நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம்...தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட முக்கிய தகவல்

சென்னையில் இன்று நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம்…தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட முக்கிய தகவல்

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரியாக ஞானேஷ் குமார் கடந்த பிப்ரவரி மாதம்  பதவியேற்றார். அதன்பின், நாடு தழுவிய அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், “மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினரிடம் தேர்தல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து, தேர்தல் விதிகளின் அடிப்படையில் அவற்றை தீர்த்து வைக்க வேண்டும்” என அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

மதுரையில் இருந்து புதிய விமான சேவை தொடக்கம்…மார்ச் 30 லிருந்து பயணிக்கலாம் என தகவல்

அதன்படி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (24.03.2025) சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள, தேர்தல் ஆணையத்தின் கீழ் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு, போலி வாக்காளர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது போன்றவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!