மதுரையில் இருந்து புதிய விமான சேவை தொடக்கம்…மார்ச் 30 லிருந்து பயணிக்கலாம் என தகவல்
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவைகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மதுரையில் இருந்து விஜயவாடாவிற்கு விமான பயணமானது பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையில் இறங்கி வேறொரு விமானத்தின் மூலம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது மதுரையில் இருந்து விஜயவாடாவிற்கு நேரடியாக விமான சேவை வருகின்ற மார்ச் 30 ஆம் தேதியில் இருந்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விமான சேவை மதுரையில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு விஜயவாடாவிற்கு காலை 11.55 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமர்க்கமாக விஜயவாடாவில் இருந்து மாலை 05.40 க்கு புறப்பட்டு இரவு 09.20 மணிக்கு மதுரைக்கு வந்தடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விமான சேவைக்கு பயணிகள் நாளை (25.03.2025) முதல் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
























