500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்படும் CATERPILLAR நிறுவனம்..!! “முதல்வர் கையெழுத்து”..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கிருக்கும் பல்வேறு முன்னணி நிறுவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த வகையில், அமெரிக்காவின் “கேட்டர்பில்லர்” நிறுவனத்துடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, “CATERPILLAR” நிறுவனமானது ரூ.500 கோடி முதலீட்டில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு..!! ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!


























