
2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்… பிறந்த நாளில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்..
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடக்க கல்வி இயக்குநர் மூலம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முன்னதாகவே வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் மாணவர்கள் சேர்க்கையை குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!! எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!
அதாவது, “தனது 72 வது பிறந்தநாளையொட்டி இன்று (01-03-2025) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்”. மேலும், இவரது பிறந்த நாளுக்காக பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

























