
RRB குரூப் D பிரிவில் 32,438 காலிப்பணியிடங்கள்…!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..|| உடனே விரையுங்கள்..!!
இந்தியன் ரயில்வே துறை குரூப் D பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஜனவரி 23 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இதற்காக 32,438 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
RRB குரூப் D காலிப்பணியிடங்கள்:
ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பின் படி இந்தியா முழுவதும் 32, 438 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RRB குரூப் D கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐஐடி முடித்ததற்கான (NCVT) சான்று அல்லது மாநில தொழிற் பயிற்சி கவுன்சில் (SCVT) சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
36 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
RRB குரூப் D ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ. 18,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
RRB குரூப் D தேர்வு செய்யப்படும் முறை:
முதலில் விண்ணப்பதாரர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் திறன் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறையின் https://www.rrbapply.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், இன்று (01.03.2025) இரவு 10.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























