கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம்.. அந்த வழி செல்லும் தமிழக பேருந்துகள் நிலை என்ன..?
கர்நாடகாவை உள்ள பெலகாவியில் நடந்த மொழி மோதல் சம்பவத்தில் கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்தை (KSRTC) சார்ந்த ஒரு பேருந்து நடத்துனரை மராத்தி ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஒக்கூட்டா (Kannada Okkoota) என்ற கன்னட ஆதரவு அமைப்பு ஆனது மார்ச் 22 ஆம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
IPL 2025 தொடர் இன்று தொடக்கம்.. நடக்கவிருக்கும் முதல் போட்டியில் ஏற்பட்ட சிக்கல்..
அதாவது, “கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தாலும் ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் முக்கிய பிரயாணங்களை கருத்தில் கொண்டு 700 பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிகளை பெற முடியாமல் போக கூடாது என்பதற்காக, ஊரக சுகாதார மையங்கள் அதன் தொடர்புடைய ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது”.
























