
சென்னையில் இன்று தொடங்கிய தொகுதி மறுவரையறை கூட்டு குழு கூட்டம்…!! தமிழக முதல்வரின் அசத்தல் கிஃப்ட் என்னனு தெரியுமா…??
மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கு, முதற்கட்டமாக சென்னையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பா.ஜ.க , த.மா.கா மற்றும் நா.த.க உள்ளிட்ட சில கட்சிகளை தவிர 50 க்கு மேற்பட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
இந்நிலையில், தற்போது தொகுதி மறுவரையறை குறித்து மற்ற மாநில தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டு குழு கூட்டம் ஒன்று தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விருந்தினர்களுக்கு பதமடைப்பாய், கோவில்பட்டி கடலை மிட்டாய், காஞ்சிபுரம் கைத்தறி பட்டு புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள் மற்றும் கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பரிசு பொருட்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.























