
விவசாயிகளுக்கான சிறப்பான திட்டங்களை அறிவித்த வேளாண் அமைச்சர்… ரூ. 45.661 கோடி மதிப்பீட்டில் வெளியான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்…!!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 -2026 யை, தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். மேலும், இந்த வேளாண் பட்ஜெட்டானது, விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், மொத்தம் ரூ. 45,661 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 2,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, மிளகாய் சாகுபடிகளை மேற்கொள்ள, “சுவை தாளிப்பு பயிர்களுக்கான சிறப்பு திட்டத்தின்” கீழ் ரூ. 11.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கு இந்திய அரசு விதித்த நிபந்தனை…!! அதிர்ந்த மஸ்க்..!! நடந்தது என்ன..?
மேலும், உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு ஆன்லைன் டெலிவரி மூலம் எடுத்து செல்ல, தமிழ்நாட்டில் உள்ள 20 உழவர் சந்தைகள் உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 297 கோடி மதிப்பீட்டில் சிறப்பு ஊக்கத்தொகையும், கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு என ரூ. 10.63 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ. 10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கவும், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக “டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி திட்டத்தின்” கீழ் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

























