சன் டிவிலேயே இந்த சீரியல் தான் டாப்பு.. வெளியான TRP விவரம் – மலைக்க வைக்கும் ரேட்டிங்!
தமிழ் சின்னத்திரையில் அந்த காலம் முதல் சீரியல் என்றாலே நமது நினைவிற்கு வருவது சன் டிவி சீரியல்கள் தான். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “கயல்” சீரியல் இந்த வார TRP-யில் முதலிடத்தை பிடித்துள்ளது.
TRP பட்டியல்:
சின்னத்திரையில் பல குடும்ப சீரியல்களை புதுமையான கன்டென்ட் உடன் கொடுத்து, வெற்றி சீரியலாக மாற்றிய பெருமை சன் டிவிக்கு இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறது. அந்த அளவிற்கு அதன் கதையும், காட்சிகளும், கதாபாத்திரங்களும் இருக்கின்றன. தற்போது கால மாற்றத்திற்கு தகுந்தாற்போல சன் டிவி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பல முன்னணி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் இன்னும் சன் டிவியை பார்க்கும் ரசிகர்கள் குறையாமல் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வார சன் டிவி சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்து TRP-யில் டாப் இடத்தை பிடித்த சீரியல் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதன் படி கயல் சீரியல் 10.43 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை வானத்தை போல சீரியல் 9.90 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.
வெளியே வரும் ராதிகாவின் சுயரூபம்.. பாக்கியாவின் அருமையை உணரும் கோபி – அடுத்தகட்ட கதைக்களம்!
Exams Daily Mobile App Download
மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியல் 9.78 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. நான்காம் இடத்தை ரோஜா சீரியல் 8.50 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஐந்தாம் இடத்தை கண்ணான கண்ணே சீரியல் 8.28 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஆறாம் இடத்தை எதிர்நீச்சல் சீரியல் 8.23 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஏழாம் இடத்தை ஆனந்தராகம் சீரியல் 7.39 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. எட்டாம் இடத்தை அன்பே வா சீரியல் 4.91 புள்ளிகளுடன் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்