இனி, விடுமுறை நாட்களில் “ONLINE CLASS” இல்லை..!! ” பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு”..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விடுமுறை அளிக்கப்படும் நாளில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளி நிர்வாகங்களுக்கு, தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். அதாவது, ” கனமழை மற்றும் அதிகமாக காற்று வீசுவதால், மாணவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களே.. தேர்வுகள் ஒத்திவைப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு!!


























