கல்லூரி மாணவர்களே.. தேர்வுகள் ஒத்திவைப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தமிழகத்தை வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இன்று (அக்.15) 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.. முக்கிய எச்சரிக்கை!!
பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், இன்று (அக்டோபர் 15) நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடலுார் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


























