
உங்க ரேஷன் கார்டு ரத்து ஆகாம இருக்கணுமா…? அப்போ 2 நாட்களுக்குள்ள இத தவறாம செஞ்சுருங்க…!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் பொருட்கள் வாங்குவதில் கைரேகை பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்கு, பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது “இறுதி நாள் முடிவதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் விரைந்து ஆதாருடன் ரேஷன் கார்டை இணைக்குமாறு” பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், “கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத மக்களுக்கு வருகின்ற மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து எந்தவித ரேஷன் பொருட்களும் வழங்கப்பட மாட்டாது” என்றும் தெரிவித்துள்ளது.























