தக்காளியின் விலை அதிரடி சரிவு.. கிலோ எவ்வளவு தெரியுமா?? இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ. 120 முதல் 150-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் தக்காளி பயன்படுத்துவதையே வெகுவாக தவிர்த்து வந்தனர். அதே போல வரத்து குறைவு மற்றும் பருவமழை காரணமாக மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்தது.
தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் நேற்று (அக்டோபர் 15) ஒரு கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 16) ரூ.90- க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.


























