தீபாவளிக்கு முன்னரே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!! மத்திய அரசு தகவல்..!! முழு விவரம் உள்ளே..!!
மத்திய அரசு ஊழியர்களின் நன்மைக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 1 மாதத்திற்கான ஊதிய தொகை போனசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது மேலும், ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது .
அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு அகவிலைப்படி சம்பள உயர்வு வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அக்டோபர் 9ம் தேதி நடந்து முடிந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு முன்னரே மத்திய அரசு துறையில் பணிபுரியும் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


























